Home / உள்நாட்டு செய்திகள் / இந்துமயானம் வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!!

இந்துமயானம் வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!!

புன்னாலைக்கட்டுவன் வடக்கு கிராம மக்கள் தமக்கு இந்துமயானம் வேண்டும் என வலியுறுத்தி சுன்னாகம் பிரதேச சபைக்கு முன்பாக இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புன்னாலைக்கட்டுவன் வடக்கு கிராமமக்களில் ஒரு தொகுதியினர் தமக்கு மீண்டும் இந்துமாயணம் வேண்டும் என ஏற்கனவே இருந்த மயானத்தினை புனரமைத்து தருவதாக சபையின் செயலர் வாக்குறுதி அளித்தும் இன்று வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினர்.

இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபடவர்கள் தெரிவித்ததாவது,

எமது கிராமத்துக்கு என இந்து மயானம் இருந்தது. பின்னர் அப்பகுதியை அண்டிய சிலர் சுகாதரத்துக்கு பாதிப்பு என கூறி அதனை எதிர்த்தனர். இதனால் மயானத்தில் பிரச்னை தோன்றியது. அப்போது இந்த விடயத்தில் தலையிட்ட பிரதேச சபையின் செயலாளர் தாம் இது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாகவும் மின்சாரத்தின் ஊடாக எரியூட்டும் வசதியினை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். ஆனால் இன்று வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனாலேயே நாம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்தனர்.

போராட்ட இடத்துக்கு வந்த பிரதேச சபையின் தவிசாளர் க.தர்சன் போராட்டத்தில் ஈடுபடவர்களுடன் சமரசத்தில் ஈடுபட்டார். இந்து மாயனம் தொடர்பான விடயம் எமது சபையின் அமர்வில் பேசப்படவுள்ளது.

எனவே சபையில் பேசி ஓர் முடிவு எடுக்கப்பட்டதும் உங்கள் மயான அமைப்பின் பிரதிநிதிகளுடன் நாம் கலந்துரையாடுவோம் என உறுதியளித்தார். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

 

About அகமுகிலன்

x

Check Also

அனைத்து ரயில் சேவை நடவடிக்கைகளும் இடை நிறுத்தம்!!

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களினால் அனைத்து தொடருந்து நடவடிக்கைகளும் இடைநிறுத்தபடுவதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்வரை இந்த ...

%d bloggers like this: