இந்திய விமானங்கள் பறக்கும் வகையில் தங்களது வான்வெளி எல்லையை பயன்படுத்த பாகிஸ்தான் அனுமதி அளித்துள்ளது .
பாலகோட் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் உறவில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து ஏற்பட்ட பதற்றத்தின் காரணமாக தங்கள் நாட்டு வான்வழியைப் பயன்படுத்த இந்தியாவுக்கு, பாகிஸ்தான் தடை விதித்தது. இந்த காலகட்டத்தில்தான் கிர்கிஸ்தான் மாநாட்டில் பங்கேற்கச் சென்ற பிரதமர் மோடி ஈரான் வான்வழியைப் பயன்படுத்திச் சென்றார்.
எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.
இந்நிலையில் கர்தார்பூர் குருத்வாராவுக்குச் செல்வதற்கு வழியைத் திறந்து விடுவது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் தனது வான்வெளியைப் பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் அனுமதி அளித்துள்ளது.
அனைவருக்கும் பகிருங்கள்!
மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்
Facebook-LIKE