Home / விளையாட்டுச் செய்திகள் / இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், அவுஸ்திரேலிய நிறுவனத்திற்கு எதிராக 13 கோடி வேண்டும் தொடர்ந்த வழக்கு!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், அவுஸ்திரேலிய நிறுவனத்திற்கு எதிராக 13 கோடி வேண்டும் தொடர்ந்த வழக்கு!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், அவுஸ்திரேலிய நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ள விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில், இந்தியா விளையாடும் போட்டிகளில் மட்டும் சச்சின் டெண்டுல்கர் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். அத்துடன் இந்திய அணிக்கு அவ்வப்போது தேவையான நேரங்களில் சரியான ஆலோசனையையும் சச்சின் வழங்கி வருகிறார்.

இந்நிலையில், அவுஸ்திரேலிய நிறுவனம் ஒன்றுக்கு எதிராக சச்சின் வழக்கு தொடர்ந்துள்ளார். அதாவது, ஸ்பார்ட்டன்ஸ் ஸ்போர்ட்ஸ் என்ற அவுஸ்திரேலிய நிறுவனம் உலகம் முழுவதும் பிரபலமானது. இந்நிறுவனத்தின் பேட்-ஐ டோனி உட்பட பல முன்னணி வீரர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

டோனி முதலில் Reebok பேட்-ஐ பயன்படுத்தினார். தற்போது ஸ்பார்ட்டன்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் பேட்-ஐ தான் பயன்படுத்தி வருகிறார். இதற்கு விளம்பரதாரராக கடந்த 2016ஆம் ஆண்டு சச்சின் நியமிக்கப்பட்டார்.

இதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், குறித்த நிறுவனம் சச்சினுக்கு 2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் மொத்தம் 13 கோடி கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அந்த நிறுவனம் இதுவரை ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை என்று சச்சின் டெண்டுல்கர் குற்றம்சாட்டியுள்ளார்.

எனவே தான் இதுதொடர்பாக அவுஸ்திரேலியாவில் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அத்துடன், தன்னுடைய புகைப்படம் மற்றும் பெயரை விளம்பரங்களில் பயன்படுத்திவிட்டு, பின் தன்னை ஏமாற்றி விட்டதாக தெரிவித்துள்ளார். விரைவில் விசாரணைக்கு வர உள்ள இந்த வழக்கு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

About இனியவன்

x

Check Also

கிரிக்கெட் வீரர்களின் முறைகேடுகளைத் தவிர்க்க புதிய நடவடிக்கை

கிரிக்கெட் வீரர்கள் ஊக்க மருந்துகளை உட்கொள்வது, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவது போன்ற குற்ற செயல்கள் குறித்த விழிப்புணர்வை இந்திய கிரிக்கெட் ...

%d bloggers like this: