Home / தொழில்நுட்ப செய்திகள் / இந்திய அரசு அறிமுகம் செய்துள்ள புதிய இணையத்தளம்..!!

இந்திய அரசு அறிமுகம் செய்துள்ள புதிய இணையத்தளம்..!!

களவாடப்பட்ட அல்லது தொலைந்துபோன ஸ்மார்ட் கைப்பேசிகளை கண்டுபிடிப்பதற்கு இந்திய அரசு புதிய இணையத்தளம் ஒன்றினை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Department of Telecommunications (DoT) அமைப்பின் கீழ் இந்த சேவை பொதுமக்களுக்காக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை தொடர்பாடல் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த திட்டத்திற்கு Central Equipment Identity Register (CEIR) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கைப்பேசிகளும் International Mobile Equipment Identity (IMEI) இலக்கத்தின் அடிப்படையில் தனித்துவமாகக் காணப்படுகின்றமையினால் இந்த திட்டத்தினை செயல்படுத்துவது இலகுவானதாகும்.

இதன் அடிப்படையில் தமது திருடப்பட்ட அல்லது தொலைந்த கைப்பேசிகள் தொடர்பாக குறித்த இணையத்தில் புகார் அளிக்கும் தருணத்தில் பொதுமக்களுக்கு உதவ முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையத்தள முகவரி – http://www.ceir.gov.in/

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

பூமியைப் போன்று மற்றொரு கிரகம் கண்டுபிடிப்பு..!!

பூமியைப் போன்று தட்பவெப்ப நிலையைக் கொண்ட மற்றொரு கிரகமான K2-18b-இல் நீர் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பூமியிலிருந்து 110 ஒளியாண்டு ...

%d bloggers like this: