Home / இந்திய செய்திகள் / இந்திய அரசாங்கத்தின் சாகித்திய அகாடமி விருந்து வழங்கி கௌரவிக்கப்பட்ட எழுத்தாளர் ஐயாத்துரை சாந்தன்!

இந்திய அரசாங்கத்தின் சாகித்திய அகாடமி விருந்து வழங்கி கௌரவிக்கப்பட்ட எழுத்தாளர் ஐயாத்துரை சாந்தன்!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த எழுத்தாளர் ஐயாத்துரை சாந்தன்,  இந்திய அரசாங்கத்தின் சாகித்திய அகாடமி விருந்து வழங்கி   கௌரவிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் மற்றும் ஆங்கில நூல்களை எழுதிய எழுத்தாளரான  ஐயாத்துரை சாந்தனை  டெல்லி தமிழ் சங்கம்  சாகித்திய அகாடமி விருந்து வழங்கி  கௌரவித்துள்ளது.

இந்த கௌரவிப்பு நிகழ்வு, கடந்த சனிக்கிழமை முன்னைநாள் யாழ் இந்திய துணைத் தூதுவரும், இந்திய மத்திய வெளியுறவுத்துறை பாஸ்போர்ட் மற்றும் விசா துறையின் இயக்குனர்  அ.நடராஜன் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது.

ஐயாத்துரை சாந்தன், ஈழத்தின் முக்கியமான எழுத்தாளர்களுள் ஒருவராக அறியப்படுவதுடன்  மொழிபெயர்ப்பிலும் உலக எழுத்தாளர்களைத் தமிழில் அறிமுகம் செய்வதிலும் குறிப்பிடத்தக்க பங்காற்றி வருகிறார்.

அத்துடன், தமிழிலும் ஆங்கிலத்திலுமாக 27 நூல்களை ஐயாத்துரை சாந்தன் எழுதி இருப்பதும் குறிப்பிடத்தக்கது

About அகமுகிலன்

x

Check Also

மர்ம நோயால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 6 குழந்தைகள் உயிரிழப்பு!!

பீகாரில் மர்ம நோயால் தாக்கப்பட்டு ஒரே நாளில் 6 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பீகாரின் முசாபர்பூர் ...

%d bloggers like this: