Home / விளையாட்டுச் செய்திகள் / இந்திய அணியை எங்களால் காப்பி அடிக்கவும் முடியாது, அவர்களைப் போல் விளையாடவும் முடியாது, எங்களுக்கு இருக்கும் வரம்புமுறை அடிப்படையில்தான் விளையாட முடியும் என்று இலங்கை அணியின் கேப்டன்

இந்திய அணியை எங்களால் காப்பி அடிக்கவும் முடியாது, அவர்களைப் போல் விளையாடவும் முடியாது, எங்களுக்கு இருக்கும் வரம்புமுறை அடிப்படையில்தான் விளையாட முடியும் என்று இலங்கை அணியின் கேப்டன்

இந்திய அணியை எங்களால் காப்பி அடிக்கவும் முடியாது, அவர்களைப் போல் விளையாடவும் முடியாது, எங்களுக்கு இருக்கும் வரம்புமுறை  அடிப்படையில்தான் விளையாட முடியும் என்று இலங்கை அணியின் கேப்டன் திமுத் கருணாரத்னே தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பைப் போட்டியில் இதுவரை இலங்கை அணி 4 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் ஒரு போட்டியில் தோல்வி, ஒரு ஆட்டத்தில் வெற்றி இருஆட்டங்கள் மழையால் ரத்து என 4 போட்டிகளில் 4 புள்ளிகளைப் பெற்று 5-வது இடத்தில் உள்ளது. அடுத்ததாக ஆஸ்திரேலய அணியுடன்  நாளை இலங்கை அணி  மோத உள்ளது.

இலங்கை கேப்டன் திமுத் கருணாரத்னே கிரிக்இன்போ தளத்துக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

எங்கள் அணியில் குறைவான திறமை உள்ள வீரர்களே இருக்கிறார்கள். மற்ற அணிகளோடு எங்களை ஒப்பீடு செய்தால், எங்களுக்கு மிகப்பெரிய வரன்முறைகள், பாதகங்கள் இருக்கின்றன உதாரணமாக, இந்தியாவுடன் எங்களை ஒப்பிட்டால், ஒவ்வொரு போட்டியிலும் அந்த அணியில் ஏதாவது ஒருவர் சதம் அடிக்கிறார். எங்கள் அணியில் ஆணடுக்கே ஒரு சில பேட்ஸ்மேன்கள்தான் ஒன்று அல்லது இரண்டு சதம் அடிப்பார்கள்.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தேவைக்கு ஏற்றார்போல் மிகப்பெரிய ஷாட்களை அடிக்கும் திறமை படைத்தவர்கள், எந்த ஸ்கோரையும் அடித்து, அதை எதிரணி அடையவிடாமல் தடுக்கும் திறமை கொண்டவர்கள். ஐபிஎல் அல்லது சர்வதேச போட்டி எதுவாக இருந்தாலும் எந்த ஒரு பந்துவீச்சாளரையும் நேருக்குநேர் சந்தித்து விளையாடியவர்கள். கிரிக்கெட்டில் அனைத்து விதமான அனுபவங்களும், புத்திசாலித்தனமும் இருக்கிறது.

எங்கள் அணியின் பந்துவீச்சாளர்களை இந்திய பந்துவீச்சாளர்களோடு ஒப்பிட முடியாது. இந்திய அணியில் மணிக்கு 140 கி.மீ வேகத்தில் பந்துவீசக்கூடிய பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். எங்களிடம் சராசரியாக 130 முதல் 135 கி.மீ வேகத்தில் பந்துவீசக்கூடிய பந்துவீச்சாளர்களே இருக்கிறார்கள். ஆதலால், நாங்கள் சில வரையரைக்குள்ளாகவே விளையாட வேண்டியதாக இருக்கிறது.நாங்கள் அணிகளுடன் போட்டியிட முடியும், ஆனால், இந்தியாவை காப்பி அடிக்க முடியாது, எங்களுக்கென தனியாக செயல்பாடு இருக்கிறது, நாங்கள் ஸ்மார்ட்டாக விளையாடினால், யாரையும் தோற்கடிக்க முடியும்

About இனியவன்

x

Check Also

கிரிக்கெட் போட்டி ஏலத்தில் வாய்ப்பை இழந்த லசித் மாலிங்க

இங்கிலாந்து கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 100 பந்துகளை கொண்ட கிரிக்கெட் போட்டி ஏலத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து ...

%d bloggers like this: