Home / உள்நாட்டு செய்திகள் / இந்தியா மற்றும் உலக நாடுகளை சேர்ந்த அரசியல் முக்கியஸ்தர்களுடன் மகிந்த!

இந்தியா மற்றும் உலக நாடுகளை சேர்ந்த அரசியல் முக்கியஸ்தர்களுடன் மகிந்த!

2எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச, உள்ளிட்ட அரசியல் குழுவினர் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளனர்.

இந்து பத்திரிகை சென்னை பதிப்பின் ஆசிரியர் முகுந் பத்மநாபன் அழைப்பின் பெயரில் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் நாளை இடம்பெறவுள்ள இந்து பத்திரிகை வெளியிடும் The Huddle சஞ்சிகையின் மூன்றாவது வெளியீட்டில் மகிந்த சிறப்புரையாற்றவுள்ளார்.

அதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவுடன், முன்னாள் அமைச்சர்கள் ஜீ.எல்.பீரிஸ், டளஸ் அழகப்பெரும, டிலான் பெரேரா, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் உதித்த லொக்குபண்டார, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வெளிவிவகாரம் மற்றும் தொடர்பாடல் பிரிவின் தலைமை பணிப்பாளர்களான கீதநாத் காசிலிங்கம் மற்றும் சமித்திரி ரம்புக்வெல்ல ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

அத்தோடு இந்தியா மற்றும் உலக நாடுகளை சேர்ந்த அரசியல்வாதிகள் உட்பட பல்துறை சார் நபர்கள் இந்த நிகழ்விற்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About அகமுகிலன்

x

Check Also

அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய இருவர் கைது!!

திருகோணமலை, கந்தல்காடு பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்  போது அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய 02 பேரை கடற்படையினர் கைது ...

%d bloggers like this: