Home / விளையாட்டுச் செய்திகள் / இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: நியூசி.அணியில் இருந்து கப்தில் விலகல்

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: நியூசி.அணியில் இருந்து கப்தில் விலகல்

காயம் காரணமாக, இந்தியாவுக்கு எதிரான இருபது ஓவர் கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்தில் விளையாட மாட்டார் என அந்த அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டீட் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்திலுக்கு முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் அந்தப் போட்டியில் விளையாடவில்லை. இந்த நிலையில் அவர் இன்னும் உடல் தகுதி பெறவில்லை என்பதால் அடுத்து நடக்கவுள்ள இந்தியாவுக்கு எதிரான இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் கப்தில் பங்கேற்க மாட்டார் என நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டீட் தெரிவித்துள்ளார்.

மார்ட்டின் கப்தில் இல்லாதது அணிக்கு பின்னடைவு எனத் தெரிவித்துள்ள அவர் வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடருக்குள் கப்தில் உடல் தகுதி பெற்றுவிடுவார் என நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

About அகமுகிலன்

x

Check Also

திமுத் கருணாரத்ன பிணையில் விடுதலை!!

மது போதையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட இலங்கை டெஸ்ட் கிரிக்கட் ...

%d bloggers like this: