Home / இந்திய செய்திகள் / இந்தியாவில் சைபர் தாக்குதலில் ஈடுபடும் சீனா

இந்தியாவில் சைபர் தாக்குதலில் ஈடுபடும் சீனா

புதுடில்லி: 

இந்தியாவில் நடத்தப்படும் சைபர் தாக்குதல்களில், 35 சதவீதம் சீனாவிலிருந்து செய்யப்படுவது தெரிய வந்துள்ளது.

ஊடுருவல்

இது தொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அமைப்பானது, தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்திற்கு அறிக்கை அனுப்பியுள்ளது. அதில்,ஏப்ரல் – ஜூன் மாதங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்திய இணையதளங்கள் மீது சீனா, அமெரிக்கா மற்றம் ரஷ்யாவிலிருந்து தான் தாக்குதல் நடத்தப்படுகிறது. பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஹேக்கர்கள், கனடா மற்றும் ஜெர்மனி சைபர்ஸ்பேஸ் மூலம், இந்திய சைபர்ஸ்பேஸ்களுக்குள் ஊடுருவுகின்றனர்.
இந்தியாவில் நடக்கும் சைபர் தாக்குதல்களில் சீனா – 35, அமெரிக்கா – 17, ரஷ்யா- 15, பாகிஸ்தான்-9, ஜெர்மனி-5, நெதர்லாநது – 4 வட கொரியா, பிரான்ஸ் – தலா 2 மற்ற நாடுகளிலில் இருந்து 4 சதவீத தாக்குதல் நடத்தப்படுவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

About இனியவன்

x

Check Also

ஜெயலலிதா சிகிச்சை வீடியோ காட்சிகள் அழிப்பு – அப்பல்லோ மருத்துவமனை பரபரப்பு தகவல்

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சி.சி.டி.வி. வீடியோ பதிவுகள் அழிந்து விட்டதாக அப்பல்லோ மருத்துவமனை பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளது. சென்னை: மறைந்த ...

%d bloggers like this: