Home / சினிமா செய்திகள் / இந்தியன் 2 படத்தை ஹிந்தியில் எடுக்கப் போகிறாரா ஷங்கர்?

இந்தியன் 2 படத்தை ஹிந்தியில் எடுக்கப் போகிறாரா ஷங்கர்?

ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல், இந்தியன் 2 படத்தைத் தொடர்வதில் அவ்வளவாக ஆர்வம் காட்டாமல் இருக்கிறார். தேர்தல் காரணமாக இப்படத்தில் நடிப்பதிலும் ஆர்வம் இல்லாமல் இருக்கிறார் கமல். மேலும், படத்தின் பட்ஜெட் பற்றியும் குழப்பமான சூழல் நிலவுவதால் இந்தியன் 2 படத்தை தயாரித்த லைகா நிறுவனம், கிட்டத்தட்ட படத்தை கிடப்பில் போட்டு விட்டது.

இதனால், நடிகர் கமலும் அதில் ஆர்வம் செலுத்தாமல், வேறு படத்தில் ஆர்வம் செலுத்தத் துவங்கி விட்டார். ஆனாலும் தொடர்ந்து, நடிகர் கமலிடம் இந்தியன் 2 சம்பந்தமாக ஷங்கர் பேசி வருகிறார். நடிகர் கமல் அது தொடர்பாக, எவ்வித பிடிப்பும் கொடுக்காமல் பேசி வருவதால், ஷங்கர் அடுத்தகட்டம் நோக்கி பயணிக்க முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தியன் 2ஐ, நடிகர் கமலை வைத்து தமிழில் எடுக்க முடியாமல் போனால், அதே படத்தை அவர் ஹிந்தியில் எடுக்க முடிவெடுத்துள்ளதாகக் கூறுகின்றனர். அமீர்கான் அல்லது ஷாரூக்கான் இருவரில் ஒருவரை வைத்து, இந்தியில் இந்தியன் 2ஐ எடுக்க பிரபல நிறுவனங்களிடம் ஷங்கர் பேசிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

தளபதி 63 படத்தில் இணைந்த மற்றுமொரு நடிகை!!

அட்லி இயக்கத்தில் விஜய் – நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் இளம் நாயகிகள் பலரும் நடித்து ...

%d bloggers like this: