Home / உள்நாட்டு செய்திகள் / இணையத்தளம் ஊடக புலமைப்பரிசில் கொடுப்பனவை பெற்றுக்கொடுப்பதற்கு தீர்மானம்..!!

இணையத்தளம் ஊடக புலமைப்பரிசில் கொடுப்பனவை பெற்றுக்கொடுப்பதற்கு தீர்மானம்..!!

ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான புலமைப்பரிசில் கொடுப்பனவை இணையத்தள முறைமையினூடாக பெற்றுக்கொடுப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் இணையத்தள முறைமை ஊடாக குறித்த கொடுப்பனவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாதாந்தம் 500 ரூபாவாக தற்போது வழங்கப்படும் கொடுப்பனவை 750 ரூபாவாக அதிகரிப்பதற்கும் கல்வியமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

புலமைப்பரிசில் பரீட்சைக்காக வருடாந்தம் சுமார் 3 இலட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் தோற்றுகின்ற நிலையில், அவர்களுள் சுமார் 15 ஆயிரம் மாணவர்கள் புலமைப்பரிசிலைப் பெற்றுக்கொள்வதற்கு தகைமை பெறுகின்றனர்.

ஒவ்வொரு மாணவருக்கும் வவுச்சர் முறைமை ஊடாக புலமைப்பரிசில் கொடுப்பனவு இதுவரை வழங்கப்பட்டு வருகின்ற நிலையில், அது தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலையை தொடர்ந்து இணையத்தள முறைமை ஊடாக மாணவர்களின் வங்கி கணக்கில் அந்த கொடுப்பனவை வைப்பிலிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் 64 பேருக்கு இடமாற்றம்…!!

சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் 64 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும் ...

%d bloggers like this: