Home / சினிமா செய்திகள் / இசைஞானி இளையாராஜாவின் நிகழ்ச்சிக்கு இவ்வளவு பணமா

இசைஞானி இளையாராஜாவின் நிகழ்ச்சிக்கு இவ்வளவு பணமா

உலகம் முழுக்க ரசிகர்களை பெற்றவர் இசைஞானி இளையராஜா. 1000 படங்களை கடந்து இசையமைத்து வருகிறார். இந்நிலையில் அவரை கவுரவப்படுத்தும் விதமாக இசை நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.

இந்த நிகழ்ச்சியினை எதிர் வருகின்ற ஃபிப்ரவரி 2,3 தேதிகளில் தயாரிப்பாளர் சங்கம் நடத்துகிறது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இதற்கான ஏற்பாடு நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விஜய்காந்த், ரஜினி, கமல், விக்ரம், ஜெயம் ரவி, ஹன்சிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பல நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் நேரில் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

இந்நிகழ்ச்சியின் மூலம் ரூ 10 கோடி பணத்தை திரட்டி, அதனை தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களான நலிந்த மூத்த தயாரிப்பாளர்களுக்கு ஓய்வூதியமாக கொடுக்க முடிவு செய்துள்ளார்களாம்.

 

About அகமுகிலன்

x

Check Also

யாரும் அறிந்திடாத நடிகர் அஜித்குமார் பற்றிய சுவாரஸ்யமான விடயங்கள்

57 படம் 38 வெற்றி, 19 படம் தோல்வி, 3 கார் ரேஸ் வின்னர், 12 பைக் ரேஸ் வின்னர், ...

%d bloggers like this: