Home / சினிமா செய்திகள் / இசைக் கருவிகள் கூடாதா.? – ஸ்ரேயா கோஷல் காட்டம்

இசைக் கருவிகள் கூடாதா.? – ஸ்ரேயா கோஷல் காட்டம்

ஹிந்தி படப் பாடகியான ஸ்ரேயா கோஷல், ஹிந்தியைத் தொடர்ந்து, இந்தியாவின் பல மொழிகளிலும் பாடல்களைப் பாடியிருக்கிறார். அவ்வப்போது, வெளிநாடுகளுக்கும் சென்று இசைக் கச்சேரிகளை நடத்துவார்.

அப்படி வெளிநாடு ஒன்றுக்கு சமீபத்தில் சென்றார். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான சர்வீஸ் மூலம் அவர் வெளிநாடு சென்றார். அவர் வெளிநாடு செல்லும்போது, தன்னுடைய இசைக் கருவிகளையும் எடுத்துச் செல்வார். ஆனால் சமீபத்தில் அவர் வெளிநாடு சென்றபோது, இசைக் கருவிகளை எடுத்துச் செல்ல விமான நிறுவனம் மறுத்து விட்டது.

எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதிக்க மாட்டோம் என விடாப்பிடியாக விமான நிறுவன ஊழியர்கள் மறுத்து விட்டனர்.
இதனால், விமான நிறுவனத்தின் நிர்வாகம் மீது கடும் கோபம் அடைந்தார் ஸ்ரேயா கோஷல்.

இது தொடர்பாக அவர் டுவிட்டரில் பதிவிட்டு, இசை கலைஞர்கள் இசைக் கருவிகளோடு பயணிக்க வேண்டாம் என சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நினைக்கிறது. நல்லது, பாடம் கற்றுக் கொண்டேன் நன்றி என விமான நிறுவனத்தை வறுத்தெடுத்திருக்கிறார். இதையடுத்து, அவரை தொடர்பு கொண்ட விமான நிறுவன அதிகாரிகள், உங்களுக்கு ஏற்பட்ட அசவுகரியங்களை எங்களுக்கு பட்டியலிட்டு எழுதிக் கொடுங்கள்; உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறோம் என கேட்டுள்ளனர்.

About இனியவன்

x

Check Also

நடிகர் சூர்யாவுக்கு கமல் ஆதரவு!!

சிவகுமார் கல்வி அறக்கட்டளை நடத்திய விழாவில் நடிகர் சூர்யா, மத்திய அரசு கொண்டு வர உள்ள புதிய கல்வி கொள்கையை ...

%d bloggers like this: