Home / தொழில்நுட்ப செய்திகள் / ஆளில்லா குட்டி விமானம் மூலம் உணவு பெருட்களை விநியோகம் செய்ய திட்டம்!!

ஆளில்லா குட்டி விமானம் மூலம் உணவு பெருட்களை விநியோகம் செய்ய திட்டம்!!

ஆளில்லா குட்டி விமானம் மூலம் உணவு பெருட்களை வாடிக்‌கையாளர்களிடம் கொண்டு சேர்க்க உபர் ஈட்ஸ் நிறுவனம் திட்டமிட்டு உணவகங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.

உணவு பெருட்களை ஆர்டர் செய்தால் டெலிவரி செய்யும் நிறுவனங்களுள் “ஊபர் ஈட்ஸ்” நிறுவனம், வாடிக்கையாளர் வ‌சப்படுத்தி அதிவிரைவாக  உணவுப் பொருட்களை கொண்டு செல்லவே இந்த புதிய திட்டத்தை வகுத்துள்ளது.

Image result for uber eats drone delivery

இந்த நிலையில் சமீபத்தில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சாண்டியாகோ பல்கலைக்கழகம் மற்றும் மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் ஆகியவற்றோடு இணைந்து அதற்கான சோதனை மேற்கொண்டுள்ளது.

Image result for uber eats drone delivery

சோதனை ஓட்டம் வெற்றியடைந்த நிலையில் ஆளில்லா விமானம் மூலம் உணவு பெருட்களை வாடிக்‌கையாளர்களிடம் கொண்டு சேர்க்க “ஊபர் ஈட்ஸ்” நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மேலும் அந்த சோதனை வெற்றி பெற்றதால் பிற நகரங்களுக்கும் இச்சேவை விரிவுபடுத்தப்பட உள்ளதாகவும் இது தொடர்பாக பல்வேறு உணவகங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் “ஊபர் ஈட்ஸ்” நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

About இனியவன்

x

Check Also

பூமியைப் போன்று மற்றொரு கிரகம் கண்டுபிடிப்பு..!!

பூமியைப் போன்று தட்பவெப்ப நிலையைக் கொண்ட மற்றொரு கிரகமான K2-18b-இல் நீர் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பூமியிலிருந்து 110 ஒளியாண்டு ...

%d bloggers like this: