Home / சினிமா செய்திகள் / ஆர்ப்பாட்டம் இல்லாமல் கூலாக பதில் சொன்ன அஜித் – வைரலாகும் வீடியோ

ஆர்ப்பாட்டம் இல்லாமல் கூலாக பதில் சொன்ன அஜித் – வைரலாகும் வீடியோ

சமீபத்தில் பள்ளி ஒன்றிற்கு சென்ற நடிகர் அஜித்திடம் அவரது ரசிகர்கள் போட்ட எடுக்க கேட்ட போது, அவர்களுக்கு ஆர்ப்பாட்டம் இல்லாமல் கூலாக பதில் சொன்ன அஜித்தின் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித்குமார், தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். ரசிகர்களின் நலனை கருத்தில் கொண்டு தனது ரசிகர் மன்றத்தை கலைத்துவிட்ட அஜித், பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை.

தனது எளிமையின் மூலம் தனது ரசிகர்கள் மட்டுமின்றி, சக நடிகர், நடிகைகளிடமும் நன்மதிப்பை பெற்றிருக்கிறார். தமிழ் திரையுலகை சேர்ந்த பல்வேறு நடிகர்களும், நடிகைகளும் தான் அஜித் ரசிகர் என்றும், நிஜ வாழ்க்கையிலும் அவரை பின்தொடர்வதாக பலமுறை பொதுவெளியில் தெரிவித்து இருக்கின்றனர்.

ரசிகர்கள் மட்டுமின்றி பலதரப்பினரிடையே தனி மதிப்பு கொண்ட நடிகராக வலம் வரும் அஜித்குமார், பள்ளி ஒன்றிற்கு சென்ற போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி இருக்கிறது.

அந்த வீடியோவில், அஜித்துடன் புகைப்படம் எடுக்க வேண்டி அங்கு வேலை பார்க்கும் அவரது ரசிகர்கள் சிலர் கேட்கின்றனர். ரசிகர்களுக்கு கூலாக பதில் அளிக்கும் அஜித், பள்ளியில் போட்டோ எடுக்கக்கூடாதுங்க. தப்பா நினைச்சுக்காதீங்க. இன்னொரு நாள் எடுக்கலாம். நான் சொல்லி அனுப்புறேன்ங்க. தம்பி அந்த கேமரா மட்டும் ஆஃப் பண்ணுங்க. வள்ளி மேடம் ரெக்வெஸ்ட் பண்ணியிருக்காங்க. தப்பா நினைச்சுக்காதீங்க. நீங்கெல்லாம் இங்க வேலை பார்க்கிறீங்களா, என்ன பண்றீங்க” என கேட்டுவிட்டு அங்கிருந்து செல்வது போல் அந்த வீடியோ முடிகிறது.

About இனியவன்

x

Check Also

ரஜினிகாந் பற்றிய 8 சுவாரஸ்ய தகவல்கள்

நடிகர் ரஜினிகாந்தின் 68-ஆவது பிறந்தநாள் இன்று (புதன்கிழமை) அவர் குறித்த சுவாரஸ்யமான 68 தகவல்கள் இவை. 1.கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ...

%d bloggers like this: