Home / தொழில்நுட்ப செய்திகள் / ஆயிரக்கணக்கான போலி கணக்குகளை நீக்கம்…!!

ஆயிரக்கணக்கான போலி கணக்குகளை நீக்கம்…!!

உலகம் முழுவதும், செயல் பட்டு  வந்த ஆயிரக்கணக்கான போலி கணக்குகளை நீக்கி உள்ளதாக டுவிட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது.

டுவிட்டரில் சமீப காலமாக வன்முறையை தூண்டும் வகையில் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பல்வேறு கணக்குகளில் இருந்து பதிவிடப்பட்டு வந்தது.

இவை  போலி என தெரியாத பலர் அது குறித்து பதில்களை பதிவிட்டு வந்தனர்.

இந்த நிலையில் சிரியாவில் நடந்த உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை  டுவிட்டரில் பதிவிட்ட சிலர், இந்தியா நடத்திய துப்பாக்கி சூட்டில் காஷ்மீர் மக்களுக்கு ஏற்பட்ட துன்பங்களை பாருங்கள் என திரித்து கூறியிருந்தனர்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

இந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து ஆராய்ந்ததில் அவை அனைத்தும் சிரியாவிலிருந்து அகதிகளாக வெளியேற்றப்பட்ட மக்களின் புகைப்படங்கள் என தெரிந்தது.

இதனையடுத்து இந்தியாவிற்கு அவப்பெயர் உண்டாக்கும் நோக்கில் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் போலி கணக்குகள் மூலம் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள் என புகார்கள் எழுந்தது.

இதனையொட்டி தற்போது ஆயிரக்கணக்கான போலி கணக்குகளை நீக்கி உள்ளதாக  டுவிட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

பூமியைப் போன்று மற்றொரு கிரகம் கண்டுபிடிப்பு..!!

பூமியைப் போன்று தட்பவெப்ப நிலையைக் கொண்ட மற்றொரு கிரகமான K2-18b-இல் நீர் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பூமியிலிருந்து 110 ஒளியாண்டு ...

%d bloggers like this: