Home / உலகச் செய்திகள் / ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி

ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி

தாய்லாந்தில் ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஆசியான்-இந்தியா உச்சிமாநாடு நடைபெற்றது. தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியானில் இடம்பெற்றுள்ள 10 நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான உறவுகளில் எட்டப்பட்டுள்ள மேம்பாடு குறித்து இந்த உச்சி மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. இந்த மாநாட்டிற்கு பிரதமர் மோடி மற்றும் தாய்லாந்து பிரதமர் பிரயூத் சான்-ஓ-சா கூட்டாக தலைமை தாங்கினர்.

ஆசியான் நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான ஒத்துழைப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என தமது உரையில் குறிப்பிட்ட பிரதமர் மோடி, கிழக்கு ஆசிய நாடுகள் தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு ஆசியான் மையப்புள்ளியாக உள்ளது என்றார். ஆசியான் நாடுகளின் ஒற்றுமையும், பொருளாதார செழிப்பும் இந்தியாவின் நலன்களுக்கும் முக்கியமானது என மோடி குறிப்பிட்டார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

பாகிஸ்தான் அகதிகள் 31 பேர் இத்தாலி அதிகாரிகளிடம் சிக்கினர்.

பிரான்ஸ் நாட்டில் இத்தாலி எல்லையில் லாரியை மடக்கி சோதனை நடத்தியபோது அதனுள் இருந்த பாகிஸ்தான் அகதிகள் 31 பேர் இத்தாலி ...

%d bloggers like this: