Home / உலகச் செய்திகள் / அல்பேனியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்

அல்பேனியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்

ஐரோப்பிய நாடான அல்பேனியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

ரிக்டர் அளவு கோலில் 5 புள்ளி 6 ஆக பதிவான நிலநடுக்கமானது அந்நாட்டு தலைநகர் டிரானா மற்றும் துறைமுக நகரமான டர்ரஸ் ஆகியவற்றில் உணரப்பட்டது. நிலநடுக்கம் காரணமாக ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன.

அந்த இடிபாடுகளில் சிக்கி ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தன. மேலும் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். நிலநடுக்கம் காரணமாக அச்சமடைந்த பொதுமக்கள் சாலைகளிலும், பூங்காக்களிலும் இரவுப் பொழுதைக் கழித்தனர். கடந்த 30 ஆண்டுகளில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கம் இது, என்று அந்நாட்டு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இறந்து போன தந்தையின் குரல் பதிவை பச்சை குத்திய மகள்

இறந்து போன தந்தையின் குரல் பதிவை பெண் ஒருவர் பச்சை குத்திக் கொண்டுள்ளார். அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் வசிக்கும் யுவெட்டே எனும் ...

%d bloggers like this: