Home / விளையாட்டுச் செய்திகள் / அரையிறுதி ஆட்டத்தில் இன்று மோதவுள்ள இந்தியா – நியூசிலாந்து அணிகள்!!

அரையிறுதி ஆட்டத்தில் இன்று மோதவுள்ள இந்தியா – நியூசிலாந்து அணிகள்!!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.

12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. லீக் முடிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராபோர்ட் மைதானத்தில் முதலாவது அரை இறுதி ஆட்டம் இன்று மாலை 3 மணிக்கு நடக்கிறது.

இதில் விராட்கோலி தலைமையிலான இந்தியா- வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தியாவும், நியூசிலாந்தும் இறுதிப்போட்டிக்கு நுழைய கடுமையாக போராடும் என்பதால் இன்றைய அரை இறுதி ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லீக்’ முடிவில் 7 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றுடன் 15 புள்ளிகள் பெற்று இந்தியா முதலிடத்தை பிடித்தது. நியூசிலாந்து அணி ‘லீக்’ ஆட்டத்தில் 5 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றுடன் 11 புள்ளிகளை பெற்று 4-வது இடத்தை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

About இனியவன்

x

Check Also

தோனியின் ரன் அவுட்டை பார்த்து அதிர்ச்சியடைந்த இருவர் மாரடைப்பால் பலி!!

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் தோனியின் ரன் அவுட்டை பார்த்து, அதிர்ச்சியடைந்த கிரிக்கெட் ரசிகர் ஒருவர் மாரடைப்பால் ...

%d bloggers like this: