Home / உள்நாட்டு செய்திகள் / அரச வைத்திய அதிகாரிகள் இன்று நாடு தழுவிய ரீதியில் வேலை நிறுத்தப்போராட்டம்..!

அரச வைத்திய அதிகாரிகள் இன்று நாடு தழுவிய ரீதியில் வேலை நிறுத்தப்போராட்டம்..!

மாலபே தனியார் மருத்­துவ கல்­லூ­ரியை தடை­செய்தல் மற்றும் இலங்கை மருத்­துவ சபையின் சுயா­தீ­னத்தை பாது­காத்தல் ஆகிய கோரிக்­கை­களை முன்­வைத்து அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்கம் இன்று நாடு தழு­விய ரீதியில் ஒருநாள் அடை­யாள வேலை நிறுத்­தத்­தினை முன்னெடுக்கவுள்­ளது.

வேலை நிறுத்தம் கார­ண­மாக சகல வைத்­தி­ய­சா­லை­க­ளி­னதும் செயற்­பா­டுகள் முடங்கும். இதனால் பொது­மக்­க­ளுக்கு ஏற்­படும் அசௌ­க­ரி­யங்­க­ளுக்­கான முழுப்­பொ­றுப்­பையும் அர­சாங்­கமே பொறுப்­பேற்க வேண்டும் எனவும் அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்­கத்தின் செய­லாளர் வைத்­தியர் நவின் தி சொய்ஷா தெரி­வித்தார்.

தொழில்சார் நிபு­ணர்­களின் கேட்போர் கூடத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

சைட்டம் மாலபே தனியார் மருத்­து­வக்­கல்­லூரி எமது நாட்டின் இல­வச கல்­விக்கு பெரும் கேள்­விக்­கு­றி­யினை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. அத்­துடன் குறித்த தனியார் மருத்­துவ கல்­லூ­ரி­யினால் வழங்­கப்­படும் சான்­றி­தழை தற்­போது பிரித்­தா­னிய வைத்­திய சபையும் ஏற்­க­மாட்­டாது என்ற அறி­விப்­பையும் விடுத்­தி­ருக்கும் நிலையில் தொடர்ந்தும் போராடி வரும் எமக்கு இது­வ­ரையில் எவ்­வித தீர்­மா­னத்­தையும் அர­சாங்கம் வழங்­கா­துள்­ளது.

இதே­வேளை சைட்டம் தனியார் மருத்­துவ கல்­லூ­ரியின் விவ­காரம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்­பிக்­கு­மாறு பிர­தி­ய­மைச்சர் ஹர்ஷ டி சில்வா தலை­மையில் குழு­வொன்றும் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­தது. அக்­குழு முன்­வைத்­தி­ருந்த அறிக்­கை­யிலும் பாரிய முரண்­பா­டுகள் நில­வு­கின்­றன. இந்த பிரச்­சி­னை­யா­னது தேசிய பிரச்­சி­னை­யாகும். எமது நாட்டின் சுகா­தா­ரத்­து­றையின் நம்­ப­கத்­தன்மை எதிர்­கா­லத்தில் அற்­று­ப்போ­வ­துடன் இதனால் பாரிய ஆபத்­தி­னையும் எதிர்­கொள்ள நேரிடும்.

ஆகவே இல­வ­சக்­கல்­வியை தனியார் மயப்­ப­டுத்தும் அர­சாங்­கத்தின் கொள்­கைக்கு எதி­ரா­கவும் சுகா­தா­ரத்­து­றையை பாது­காப்­ப­தற்கும் நாம் கடந்த 2009 ஆம் ஆண்­டி­லி­ருந்து போரா­டி­வ­ரு­கின்றோம். இதற்­காக பல்­வேறு போராட்­டங்­க­ளையும், வேலை நிறுத்­தத்­தி­னையும் மேற்­கொண்டு வரு­கின்றோம். எனினும் இது­வ­ரையில் அர­சாங்கம் உரிய தீர்­வினை வழங்­காது தொடர்ந்தும் அச­மந்தப்போக்­கி­னையே கையாண்டு வரு­கின்­றது.

சில அர­சியல்வாதி­களின் செயற்­பா­டு­க­ளி­னா­லேயே இந்த பாதிப்பு எமக்கு ஏற்­ப­ட­வுள்­ளது. சுகா­தார அமைச்­சரின் தலை­யீடும் இலங்கை வைத்­திய சபையின் சுயா­தீ­னத்தை பாதிக்கும் வகையில் அமைந்­துள்­ளது. எம்­மீது எதிர்ப்­பினை வெளிப்­ப­டுத்­து­வ­தாக தெரி­வித்து அதற்கு பொது­மக்­களை பலிக்­க­டாக்­க­ளாக மாற்ற நினைக்­கின்­றார்கள்.

எனவே இதற்­கான தகுந்த தீர்­மானம் ஒன்­றினை அர­சாங்கம் முன்­வைக்கும் வரையில் எமது போராட்­டத்­தினை கைவி­டப்­போ­வ­தில்லை என்று தீர்­மா­னித்­தி­ருக்­கின்றோம்.

அத­ன­டிப்­ப­டையில் எமது மத்­திய குழு கூட்­டத்தில் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னத்­திற்கு அமை­வாக நாளை (இன்று) நாட­ளா­விய ரீதியில் அனைத்து வைத்­தி­ய­சா­லை­க­ளிலும் 24 மணி­நேர அடை­யாள வேலை நிறுத்­தத்­தினை முன்­னெ­டுக்­க­வுள்ளோம். குறித்த வேலை­நி­றுத்­த­மா­னது காலை 8 மணி­முதல் மறுநாள் காலை 8 மணி­வ­ரையில் அமுல்ப்­ப­டுத்­தப்­படும்.

இதே­வேளை மஹ­ர­கம புற்­று­நோ­யாளர் வைத்­தி­ய­சாலை, வைத்­தி­ய­சா­லை­களின் அவ­சர சிகிச்சை நிலையம், விபத்­துக்கள் பிரிவு, மகளிர் மற்றும் குழந்­தைகள் வைத்­தி­ய­சாலை என்பனவற்றில் வழமைபோல் அதன் சேவைகள் இடம்பெறும்.

சகல வைத்தியசாலைகளிலும் கறுப்புக்கொடி மற்றும் சைட்டம் எதிர்ப்பு பதாகைகள் காட்சிப்படுத்தப்படும். வேலை நிறுத்தம் காரணமாக சகல வைத்தியசாலைகளின் சேவைகளும் நாடளாவிய ரீதியில் முடங்கும். இதனால் பொது மக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களுக்கான முழுப்பொறுப் பினையும் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்றார்.

 

About கலைப்பிரியன்

x

Check Also

RADIOTAMIZHA | ஜிந்துபிடிய பகுதியில் உள்ள 50 பேரின் PCR பரிசோதனை முடிவுகள் வெளியாகின!

கொழும்பு, ஜிந்துப்பிட்டிய பகுதியில் இருந்து கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பப்பட்டவர்களில் 50 பேரின் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. குறித்த ...

%d bloggers like this: