Home / உள்நாட்டு செய்திகள் / அரசியல் ஆதிக்கதிணிப்பு

அரசியல் ஆதிக்கதிணிப்பு

இந்திய மத்திய அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு (Hindi) மொழியை எவ்வாறு திணித்ததோ அதேபோல்
இலங்கையிலும் இந்திய மத்திய அரசு தனது அரசியல் ஆதிக்கபாணியை திணிக்க முற்ப்படுகிறது.

இலங்கை மக்கள் வருங்காலம் சீன மொழி பேசக்கூடாது என்பதற்க்காகவும் இருக்கலாம்.

அண்மையில் இந்திய புலனாய்வு அமைப்பின் பெயர் (றோ) இலங்கை ஊடகங்களில் இடம்பிடித்த காலத்திற்க்கு முன்பே இந்த திணிப்பு ஒத்திகை ஆரம்பித்துவிட்டது.

சீனாவின் செல்லப்பிள்ளையாக இருக்கும் மகிந்தவை இந்திய மத்திய அரசு தனது கைப்பிள்ளையாக கொண்டுவந்தால் இலங்கையை தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரலாம் அத்தோடு வேறு வல்லரசுகளின் வருகையை மகிந்தவை வைத்து தடுக்கலாம் என நினைக்கிறது.

இதனால்த்தான் மகிந்தவுக்கு பிரதமர் பதவி ,நாங்கள் பார்துக்கொள்கிறோம் என இந்தியா வாக்குறுதி கொடுத்திருக்கிறது. அதன் விளைவுதான், இலங்கையின் பாராளுமன்றத்தில் இந்தளவுக்கு அமைதியின்மையும் மைத்திரிபாலசிறிசேனவின் வேடிக்கையும் அரசியல் நாடகமாக அரங்கேறிக்கொண்டிருக்கிறது.
ஆனால், இந்த திட்டம் எந்த அளவுக்கு சாத்தியம் ஆகும் என்பது சொல்லமுடியாத விடயம்
ஏன்என்றால் ரணிலுடன் அமெரிக்கா களத்தில் இறங்கியிருக்கிறது ,

அத்துடன் இலங்கையின் மேற்ப்பரப்பிலே தான் இலங்கையர்கள் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள்
இலங்கையை புரட்டிப்பார்த்தால் சீன அரசியல் நீரோட்டமும் சீனர்களுமே தெரிவார்கள்.
அடுத்த கட்டம் அமெரிக்காவின் தலைமையில் உலகநாடுகள் ஒன்றினைந்து இலங்கையை தனிமைப்படுத்தும். அப்போது இந்துசமுத்திரத்தில் தனியாக தத்தளிக்கப்போகிறது இலங்கை. இதனை இந்தியாவும் உணரப்போகிறது.

இதற்கிடையில் தமிழ் அரசியல்வாதிகள் எந்தளவுக்கு சாணக்கியமாக செயற்ப்படப்போகிறார்கள் என்பதே தமிழ்மக்களின் எதிர்பார்ப்பு.

நடந்த சந்திப்புக்களும் நடந்துகொண்டிருக்கும் சந்திப்புக்களும் இனி நடக்கப்போகும் சந்திப்புக்களையும் வைத்துப் பாருங்கள் உங்களுக்கே புரியும்

இது அரசியல் அவதானிப்புகள்

 

About இனியவன்

x

Check Also

இன்று இன்று பிரதமர் பதவியை இராஜினாமா செய்யவுள்ள மஹிந்த

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று தமது பதவியை இராஜினாமா செய்யவுள்ளார். இத்தகவலை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தனது ட்விட்டர் ...

%d bloggers like this: