Home / உள்நாட்டு செய்திகள் / அரசாங்க மற்றும் தனியார் துறை இணைய தள உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்!!

அரசாங்க மற்றும் தனியார் துறை இணைய தள உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்!!

இலங்கையில் அரசாங்க மற்றும் தனியார் துறை இணைய தள உரிமையாளர்களுக்கு சைபர் தாக்குதல் தொடர்பான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

சைபர் தாக்குதலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மேற்படி பிரிவின் பாதுகாப்பு பொறியியலாளர் ரவிது மீகாஸ்முல்ல தெரிவிக்கையில், சில இணையதள உரிமையாளர்கள் இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

மேலும் நேற்றைய தினம்  சைபர் தாக்குதலுக்கு இலக்கான டொட் கொம் மற்றும் டொட் எல்.கே ஆகிய இணையத்தள முகவரி பரப்புகளை கொண்ட பல இணையத்தளங்கள் வழமை நிலைக்கு திரும்பியுள்ளன என சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்!!

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யகூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்திய் சப்ரகமுவ ...

%d bloggers like this: