Home / உலகச் செய்திகள் / அமெரிக்க ஆதரவு படைகள் நடத்திய தாக்குதலில் சிரியாவில் 16 பேர் பலி!

அமெரிக்க ஆதரவு படைகள் நடத்திய தாக்குதலில் சிரியாவில் 16 பேர் பலி!

சிரியாவில் அமெரிக்க ஆதரவு படைகள் நடத்திய தாக்குதலில் 16 பேர் உரிழந்துள்ளனர்..

யூப்ரடிஸ் ஆற்றுப்படுகையில் 4 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்குள் ஐஎஸ் தீவிரவாதிகள் கடைசியாக தஞ்சமடைந்துள்ளனர். அதையடுத்து அவர்களை அழித்தொழிக்க அமெரிக்க ஆதரவுடன் செயல்படும் குர்துப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இதையடுத்து தீவிரவாதிகளைக் குறிவைத்து தெய்ர் அஸ் ஸோர் Deir ez Zor மாகாணத்தில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் குழந்தைகள் உள்பட 16 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் துருக்கி எல்லையில் உள்ள அல் ரெய் என்ற இடத்தில் சோதனைச் சாவடியில் கார் குண்டு மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் 3 காவலர்கள் உள்பட 7 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

LIKE-Facebook

 

 

About அகமுகிலன்

x

Check Also

2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த- எம்.பி. பெர்னி சாண்டர்ஸ்

2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக எம்.பி. பெர்னி சாண்டர்ஸ் அறிவித்துள்ளார். தமது சொந்த ஊரான வெர்மான்ட் Vermont ...

%d bloggers like this: