Home / உலகச் செய்திகள் / அமெரிக்கா, கிரீஸ் இடையே புதிய பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம்

அமெரிக்கா, கிரீஸ் இடையே புதிய பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம்

அமெரிக்கா, கிரீஸ் இடையே புதிய பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

கிரீஸ் நாட்டுக்கு சென்ற அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ, ஏதென்ஸில் அந்நாட்டு பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர்களை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் முடிவில் அமெரிக்கா, கிரீஸ் நாடுகள் இடையே திருத்தப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் என்ற பெயரில் புதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின்படி, கிரீஸ் நாட்டின் Crete பகுதியிலுள்ள Souda விரிகுடாவை தனது கடற்படை, விமானப்படைக்கு அமெரிக்கா பயன்படுத்திக் கொள்ளும்.

ஆப்கானிஸ்தான் மற்றும் கோசாவோவில் நேட்டோ நடவடிக்கைகளில் கிரீஸ் பங்குபெறும்.  பொருளாதாரம், வர்த்தகம், கலாசார விவகாரங்களில் ஒத்துழைப்பை அதிகரிக்கவும் அமெரிக்காவும், கிரீஸும் ஒப்புக் கொண்டன.

கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் சைப்ரஸ், துருக்கி இடையே நிலவும் பிரச்னைக்கு தீர்வு காண அமெரிக்கா தனது செல்வாக்கை பயன்படுத்த வேண்டுமென்று கிரீஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இறந்து போன தந்தையின் குரல் பதிவை பச்சை குத்திய மகள்

இறந்து போன தந்தையின் குரல் பதிவை பெண் ஒருவர் பச்சை குத்திக் கொண்டுள்ளார். அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் வசிக்கும் யுவெட்டே எனும் ...

%d bloggers like this: