Home / உலகச் செய்திகள் / அமெரிக்காவுக்கு சவால் விடும் ஆதிவாசிகள்

அமெரிக்காவுக்கு சவால் விடும் ஆதிவாசிகள்

அமெரிக்காவுக்கு சவால் விடும் ஆதிவாசிகள்

அந்தமானின் வடக்கு சென்டினல் தீவுகளில் வசித்து வரும் பழங்குடியின மக்கள் இன்னமும் தமது ஆதிவாசி பாரம்பரியத்தில் வாழ்ந்து வருபவர்கள்.
என்ன தான் உலகம் பல தொழினுட்பங்களை கண்டுவிட்ட போதும் அவர்கள் உலக தொடர்பே இல்லாமல் இன்னமும் காட்டு வாசிகளாகவே வாழ்ந்து வருகின்றனர்.

குறைவான எண்ணிக்கையில் வாழும் இந்த பழங்குடியினரை பாதுகாக்கப்பட்ட இனமாக அறிவித்துள்ள இந்திய அரசு வடக்கு சென்டினல் தீவுக்கு அன்னியர்கள் யாரும் செல்வதற்கும் தடை விதித்து உள்ளது.

சென்டினல் பழங்குடி மக்கள் அறுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அந்தமானில் வாழ்ந்து வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

செண்டினல் பழங்குடி மக்கள் பேசு மொழி, மற்ற அந்தமான் பழங்குடி மக்கள் பேசும் மொழிகளுக்கும் அதிக வேறுபாடு உள்ளது. செண்டினல் இன மக்கள் ஆப்பிரிக்காவின் கருப்பின மக்களைப் போல உருவமும் நிறமும் கொண்டுள்ளனர்.

தடையையும் மீறி யாராவது அவர்களின் இடத்துக்கு போனால் அம்புகளை எய்தி கொன்றுவிடுவார்கள்.

பூர்வகுடிகளான பழங்குடியினர் 350 அடி தொலைவுக்கு உட்பட்ட எந்தப்பொருள் மீதும் குறி தவறாமல் அம்பு எய்வதில் வல்லவர்கள்.

வடக்கு சென்டினல் தீவுக்கு சென்ற ஜான் ஆலன் காவ் (வயது 27) என்ற அமெரிக்கரை பழங்குடியினர் கொன்றுவிட்டனர். இவர் கிறிஸ்தவ மதத்தை பரப்பும் நோக்கில் அங்கு சென்றுள்ளார்.

போகும் முன்பு தான் கிறிஸ்தவ மதத்தை காட்டு வாசிகளுக்கு பரப்பும் நோக்கில் சென்டினல் தீவுக்கு செல்வதாக எழுதிய டயரி மட்டும் கண்டுபிடிக்கப்பட்டது.

காட்டுவாசிகளால் கொல்லப்பட்ட அமெரிக்கர் ஜான் ஆலன் காவ் உடலை கண்டு பிடிக்க மிகவும் சிரமமாக உள்ளது. அமெரிக்கரின் உடலை மீட்க வேண்டும் என்று அவருடைய குடும்பத்தார் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து இந்திய பொலிசார் படகுகளில் சென்டினல் தீவுக்கு சென்ற சமயம் வில், அம்புவுடன் குறிபார்த்த நிலையில் நின்றிருந்த காட்டு வாசிகள் அவர்களை திருப்பி அனுப்பியுள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு மானுடவியல் ஆய்வாளர்கள் சென்டினல் தீவுக்கு சென்று பழங்குடி மக்களிடம் அன்பாக பேசியுள்ளனர். இதன் காரணமாக அவர்களின் உதவியை நாட பொலிசார் முடிவு செய்துள்ளனர்.

பழங்குடி மக்களிடம் நட்புடன் பழகுவது குறித்து அவர்களிடம் கேட்டறிந்து கொண்டு அவர்களையும் அழைத்துக்கொண்டு அங்கு செல்ல திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட அமெரிக்கர் ஜான். தான் வணங்கும் கிருஸ்தவ மதத்தை உலகளாவிய அளவில் பரப்புவதை தொழிலாக கொண்டிருந்தார்.

அவர் தனது டயரில் “நான் இங்கு வந்தது பைத்தியகாரத்தனமாக தெரியலாம். ஆனால் அதைப்பற்றியெல்லாம் நான் கவலைப்பட போவதில்லை.இந்த மக்களுக்கு இயேசுவின் போதனைகளை தெரிவிப்பேன். இதனால் என் உயிருக்கு ஆபத்து நேர்ந்தாலும் பரவாயில்லை” என எழுதியிருந்தார்.

கிறிஸ்தவ மதத்தை பரப்ப விரும்பியவரின் உயிரை சென்டினல் ஆதிவாசிகளின் அம்பு குடித்து விட்டது.

ஜானில் உடல் கிடைக்குமா என்பது சந்தேகமே. ஆனால் இதன் காரணமாக கோபம் கொண்டுள்ள அமெரிக்கா அடுத்து என்ன செய்யும் என்பதுவும் பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது.

Map locating North Sentinel Island where an American missionary killed by a tribe if hunter-gathers on Wednesday.

About Radio tamizha

x

Check Also

நாடு கடத்தும் தீர்ப்பு வெளியாகியும் அதிர்ச்சி அடையாத விஜய்மல்லையா

என்னை நாடு கடத்துவது தொடர்பாக லண்டன் கோர்ட் அளித்த தீர்ப்பினால் அதிர்ச்சி அடைய ஏதுமில்லை என விஜய் மல்லையா குறிப்பிட்டுள்ளார். ...

%d bloggers like this: