Home / உலகச் செய்திகள் / அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : 11 பேர் பலி

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : 11 பேர் பலி

பிட்ஸ்பர்க் :

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிட்ஸ்பர்க் சினகாக் பகுதியில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலியாகியுள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் தனிநபர்கள் துப்பாக்கிவைத்து கொள்ளும் கலாச்சாரம் தொடர்ந்து அதிகரித்துவருவதன் காரணமாக, ஆங்காங்கே துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இது அம்மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது. இதனிடையே, பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிட்ஸ்பர்க் சினகாக் பகுதியில், நபர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூட்டில் சம்பவ இடத்திலேயே 11 பேர் பலியாகியுள்ளனர். 2 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, துப்பாக்கிச்சூடு நடத்தியவரை சுற்றிவளைத்து, தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். அப்போது நடைபெற்ற விசாரணையில், அவர், 46 வயதான ராபர்ட் போவர்ஸ் என்பது தெரியவந்துள்ளது. அவர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டிரம்ப் கண்டனம் :

அதிபர் டிரம்ப், இந்த துப்பாக்கிச்சூட்டை, வெகுஜன கொடூரமான செயல் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

25 ஆண்டுகளில் இல்லாத சாதனை :

அமெரிக்கா, இந்த மாதத்தின் துவக்கத்தில் தான், 25 ஆண்டுகளுக்கு பிறகு, துப்பாக்கிச்சூடு இல்லாத வார இறுதி நாட்களை கொண்டாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

About இனியவன்

x

Check Also

தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஈருருளிப்பயணம்!!

ஐநா நோக்கிய பேரணியை வலுப்படுத்தவும் ஐரோப்பிய நாடுகளிடம் நீதிகோரியும்  ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப்பயணம். நேற்றைய தினம் 18/02/2019 பி.ப ...

%d bloggers like this: