Home / சினிமா செய்திகள் / அமெரிக்காவில் கிராமி விருது நிகழ்ச்சியில் மகளுடன் பங்கேற்ற ஏ.ஆர். ரஹ்மான்

அமெரிக்காவில் கிராமி விருது நிகழ்ச்சியில் மகளுடன் பங்கேற்ற ஏ.ஆர். ரஹ்மான்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலசில் கிராமி விருது நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மகளுடன் பங்கேற்றார்.

இசைக் கலைஞர்களின் திறமைக்கு அங்கீகாரம் வழங்கும் உயரிய விருதுகளில் ஒன்றான கிராமி விருது வழங்கும் நிகழ்ச்சி அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலசில் நடைபெற்றது. இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.

தமது மகள் ரஹீமாவுடன் பங்கேற்ற ஏ.ஆர்.ரஹ்மான், அது தொடர்பான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். மேலும் 86 வயதில் 28-வது கிராமி விருது பெற்ற குவின்சி ஜோன்சையும் ரஹ்மான் பாராட்டியுள்ளார்.

2010-ஆம் ஆண்டு ஸ்லம் டாக் மில்லியனர் படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் கிராமி விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

LIKE-Facebook

 

 

About அகமுகிலன்

x

Check Also

பிரபல இயக்குநர் மகேந்திரன் இன்று காலை காலமானார்.

பிரபல திரைப்பட இயக்குனர் மகேந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழ் ...

%d bloggers like this: