Home / உலகச் செய்திகள் / அமெரிக்காவின் விசா தள்ளுபடி திட்டத்தில் புதிதாக இலங்கை இணைப்பு!!

அமெரிக்காவின் விசா தள்ளுபடி திட்டத்தில் புதிதாக இலங்கை இணைப்பு!!

அமெரிக்காவின் விசா தள்ளுபடி திட்டத்தில் புதிதாக இலங்கை உள்ளிட்ட 10 நாடுகள் இணைக்கப்படவுள்ளன.

இலங்கையில் அமெரிக்க இராணுவத்தளம் ஒன்றை அமைக்க அரசாங்கம் அனுமதியளித்தன் விளைவாக, இலங்கைக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏபி (Newsap.com) இணையத்தளம் இச் செய்தியை வெளியிட்டுள்ளது.

அர்ஜென்டினா, உருகுவே, , ஜமைக்கா, ஹாங்காங், இலங்கை, தென்னாபிரிக்கா, கென்யா, சீசெல்ஸ், மலாவி மற்றும் ஜோர்ஜியா ஆகியவை பத்து நாடுகளாகும்.

ஆர்ஜென்டினா, உருகுவே ஆகிய இந்த திட்டத்திலிருந்து 2002, 2003 இல் நீக்கப்பட்டிருந்தன. இப்போது மீள இணைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், இந்த நாடுகளின் பிரஜைகள் சுற்றுலா மற்றும் வணிக நோக்கங்களிற்காக விசா இன்றி அமெரிக்காவில் 180 நாட்கள் தங்கியிருக்கலாம்.

அமெரிக்காவிற்கு புறப்படுவதற்கு முன்னர், குறைந்தபட்சம் 72 மணிநேரம் (3 நாட்கள்) முன்னதாகவே, பயண அங்கீகாரத்திற்கான மின்னணு அமைப்பு (ESTA) மூலம் பயண அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

எனினும், சூடான், லிபியா, சோமாலியா, சிரியா, ஈராக், ஈரான், மற்றும் யேமன் ஆகிய நாடுகளின் இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் எனில், அவர்கள் முறைப்படி விசா பெற வேண்டும்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

டோக்கியோ நகரில் நிலநடுக்கம்!!

அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசு முறைப்பயணமாக ஜப்பான் சென்றுள்ள நிலையில், அவரது வருகைக்கு சற்று முன்பு டோக்கியோ நகரில் நிலநடுக்கம் ...

%d bloggers like this: