Home / தொழில்நுட்ப செய்திகள் / அப்பிள் நிறுவனத்தில் இருந்து விலகவுள்ள சேர்.ஜொனி ஐவ்

அப்பிள் நிறுவனத்தில் இருந்து விலகவுள்ள சேர்.ஜொனி ஐவ்

Apple  நிறுவனத்தின் பிரபலமான ஐ போன் உள்ளிட்ட பல கருவிகளை வடிவமைத்த சேர்.ஜொனி ஐவ் அப்பிள் நிறுவனத்தில் இருந்து விலகவுள்ளார்.

அவர் தமது சொந்த நிறுவனம் ஒன்றை ஸ்தாபிக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Apple  நிறுவுனர் ஸ்டீவ்ஜோப்ஸ் உடன் நெருங்கிய நட்பைக் கொண்டவரும், ‘தமது இன்னொரு உயிர்’ என்று ஸ்டீவ் ஜொப்சால் கூறப்பட்டவருமான ஜொனி, அப்பிள் நிறுவனத்தின் முக்கிய திருப்புமுனைகளுக்கு காரணமாக இருந்தவர்.

அந்த நிறுவனம் நிதி நெருக்கடியில் இருந்த காலத்தில் அவர் வடிவமைத்த ஐமெக் உலக அளவில் புகழ்பெற்று நிறுவனத்தை நிலை நிறுத்தியது.

ஐபோன், ஐபொட், அப்பல்வொட்ச், இறுதியாக வந்த இயர்பொட் என பலவற்றையும் அவரே வடிவமைத்துக் கொடுத்திருந்தார்.

அண்மையில் அமெரிக்காவில் திறக்கப்பட்ட Apple  நிறுவனத்தின் பல்லங்காடி கட்டிடத் தொகுதியையும் அவரே பொறியலாளர்களுடன் இணைந்து வடிவமைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

 

About அகமுகிலன்

x

Check Also

கூகுள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வசதி!!

கூகுள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள குரோம் இணைய உலாவியே இன்று உலகளவில் அதிக பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த உலாவியில் ...

%d bloggers like this: