அன்னை தெரசா பிறந்தநாளை முன்னிட்டு சமூக சேவைக்கான விருதை அன்னை தெரசா விருதை நடிகர் ராகவா லாரன் வென்றார்.
சிறந்த சமூக சேவகரான அன்னை தெரசாவின் 108வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, காமராஜர் அரங்கத்தில் விருது வழங்கும் விழா நடந்தது.
இந்த உலகின் முதல் கடவுளாக தாயை நினைக்கிறேன். ஒருகாலத்தில் நான் நோயால் பாதிக்கப்பட்டிருந்த போது என்னை தாய் நம்பிக்கையோடு காப்பாற்றவில்லை என்றால், நான் இல்லை.
அன்னை தெரசா டிரஸ்ட் சார்பில் நடந்த இந்த விழாவில் நிறுவனர் ஜி.கே.தாஸ், அன்னை தெரசா பேரவை மாநில தலைவர் டி.வி. பாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் சிறந்த சமூக சேவைக்கான விருது திரைப்பட நடிகர் ராகவா லாரன்சுக்கு வழங்கப்பட்டது. தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இவ்விருதை ராகவா லாரன்சுக்கு வழங்கினார்கள்.