Home / உள்நாட்டு செய்திகள் / அனைத்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் ஆர்ப்பாட்டம்

அனைத்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் ஆர்ப்பாட்டம்

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நடத்துகின்ற ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கொழும்பு, வோர்ட் பிளேஸ் வீதி தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

2000த்திற்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பு கோட்டையில் இருந்து  பேரணியாக அவர்கள் கொழும்பு நகர மண்டபம் நோக்கி பேரணியாக சென்றுள்ளனர்.

உயர் கல்வி அமைச்சரை சந்திப்பதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு பேரணியாக சென்ற மாணவர்கள் ஆணைக்குழுவின் நுழைவாயிற் கதவை உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அப் பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About இனியவன்

x

Check Also

பதுளை மாவட்டத்தில் வீசிய கடும் காற்று காரணமாக 30க்கும் அதிகமான வீடுகள் சேதம்!!

பதுளை மாவட்டத்தின்  பல  பிரதேசங்களில் வீசிய கடும் காற்று காரணமாக 30க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன. அனர்த்த முகாமைத்துவ பதுளை ...

%d bloggers like this: