Home / உள்நாட்டு செய்திகள் / அதிபர்களுக்கான வெற்றிடங்கள் ஜனவரி மாத இறுதிக்குள் நிவர்த்தி செய்யப்படும் என கல்வி அமைச்சு தெரிவிப்பு

அதிபர்களுக்கான வெற்றிடங்கள் ஜனவரி மாத இறுதிக்குள் நிவர்த்தி செய்யப்படும் என கல்வி அமைச்சு தெரிவிப்பு

தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர்களுக்கான வெற்றிடங்கள், ஜனவரி மாத இறுதிக்குள் நிவர்த்தி செய்யப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டிலுள்ள 302 தேசிய பாடசாலைகளில் பதில் அதிபர்களே கடமையாற்றுவதாக அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த பாடசாலைகளுக்கான அதிபர்களை நியமிப்பதற்கு, நேர்முக பரீ்ட்சைகள் நிறைவடைந்துள்ளதாகவும், அதற்காக 800 க்கும் அதிக விண்ணப்பங்கள் கிடைத்ததாகவும் மேலும் அவர் கூறினார்.

நேர்முக பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியலை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் அரச சேவை ஆணைக்குழுவிற்கு அனுப்பவுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

 

About அகமுகிலன்

x

Check Also

ரயில் சேவை தொடர்பில் மீளாய்வு செய்ய குழு

ரயில் சேவை தொடர்பில் மீளாய்வு செய்வதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து சேவை அமைச்சர் C.B. ரத்னாயக்க தெரிவித்துள்ளார். ரயில் ...

%d bloggers like this: