Home / உள்நாட்டு செய்திகள் / அதிகாலையில் ஏ9 வீதியில் கோர விபத்து!

அதிகாலையில் ஏ9 வீதியில் கோர விபத்து!

வவுனியா, புளியங்குளம் பகுதியில் ஏற்பட்ட கோர விபத்தில் ஐவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை இடம்பெற்ற இவ்விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, புளியங்குளம், இராமனூர் பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றது. கொழும்பில் இருந்து கிளிநொச்சி நோக்கிச் சென்ற ஹென்ரேனர் ரக வாகனமும், கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி வந்த ரோசா வானும் ஏ9 வீதி, புளியங்குளம், இராமனூர் பகுதியில் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டது.

இவ் விபத்து காரணமாக இரு வாகனங்களின் சாரதிகள் உட்பட 5 பேர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகிறார்கள்.

About இனியவன்

x

Check Also

பலத்த சந்தேகத்தைக் கிழப்பியுள்ள போதநாயகியின் கடைசி வரிகள்!!

காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளரும், ஈழத்து கவிஞர் வன்னியூர் செந்தூரனின் ...

%d bloggers like this: