Home / சினிமா செய்திகள் / அடுத்த படத்திற்கு மீண்டும் இணையும் அட்லி விஜய்

அடுத்த படத்திற்கு மீண்டும் இணையும் அட்லி விஜய்

தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். இவர்கள் கூட்டணியில் உருவாக இருக்கும் இப்படம் விளையாட்டை மையமாகக் கொண்ட படம் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை ஏஜி எஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கவுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார்.

 

இன்னும் பெயரிடப்படாத இந்தப் திரைப்படத்தை ‘தளபதி 63’ என்று அழைத்து வருகிறார்கள். இப்படத்தின் முன்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

மேலும் இந்த படத்தின் பூஜை ஜனவரி 20ம் தேதியும், படப்பிடிப்பு ஜனவரி மாதம் 21ம் தேதியும் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

About அகமுகிலன்

x

Check Also

யாரும் அறிந்திடாத நடிகர் அஜித்குமார் பற்றிய சுவாரஸ்யமான விடயங்கள்

57 படம் 38 வெற்றி, 19 படம் தோல்வி, 3 கார் ரேஸ் வின்னர், 12 பைக் ரேஸ் வின்னர், ...

%d bloggers like this: