Home / இந்திய செய்திகள் / அசாம் சென்ற பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி போராட்டம்!

அசாம் சென்ற பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி போராட்டம்!

பிரதமர் நரேந்திரமோடி சென்ற வழியெல்லாம் கருப்புக் கொடி காட்டி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் இதனால் அசாம் மாநிலம் கவுகாத்தியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவில் குடிபெயர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு குடிமக்கள் அந்தஸ்து வழங்கும் சட்டத்திருத்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநில மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அகதிகளுக்கு குடிமக்கள் அந்தஸ்து கொடுக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. மேலும் சட்டத்திருத்த மசோதாவில் இஸ்லாமியர்கள் இல்லாததும் சர்ச்சையாகியுள்ளது.

இதனால் பிரதமர் நரேந்திரமோடி இரண்டு நாள் பயணமாக அசாம் மாநிலத்திற்கு நேற்று சென்றார். முன்னதாக மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட அசாமின் அனைத்து மாணவர் சங்கம் அழைப்பு விடுத்து இருந்தது.

தலைநகர் கவுகாத்தியில் உள்ள விமான நிலையத்தில் இருந்து ஆளுநர் மாளிகை சென்ற பிரதமர் மோடிக்கு வழியெங்கும் மக்கள் கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோ பேக் மோடி என்ற பதாகைகளை ஏந்தியபடி முழக்கங்களை எழுப்பியுள்ளனர். மணிப்பூர், திரிபுரா, அருணாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் மக்கள் திரண்டு பிரதமர் மோடிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்றும் போராட்டம் நடைபெற இருந்த சூழலில், கவுகாத்தியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

About அகமுகிலன்

x

Check Also

அஜித், விஜய் உள்ளிட்ட நடிகர்கள் வாக்களிப்பு

அஜித்குமார்: தென் சென்னை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட திருவான்மியூரில் காலை 7.05 மணியளவில் நடிகர் அஜீத் தனது மனைவி ஷாலினியுடன் வரிசையில் ...

%d bloggers like this: