Home / உள்நாட்டு செய்திகள் / அசா­தா­ரண சூழ்­நி­லை­களால் பிற்­போ­டப்­பட்ட பரீட்சைகள் நடத்துவதற்கான திகதிகள் அறிவிப்பு!!

அசா­தா­ரண சூழ்­நி­லை­களால் பிற்­போ­டப்­பட்ட பரீட்சைகள் நடத்துவதற்கான திகதிகள் அறிவிப்பு!!

கடந்த மாதம் ஏப்ரல் 22 தொடக்கம் நடை­பெ­ற ­ இருந்து நாட்டில் ஏற்­பட்ட அசா­தா­ரண சூழ்­நி­லை­களால் பிற்­போ­டப்­பட்ட இலங்கை அதிபர் சேவைக்­கான ஆங்­கிலப் பரீட்சை, இலங்கை கீழைத்­தேய கல்விச் சங்­கத்தின் பரீட்­சைகள், ஆய்­வு­கூட உத­வி­யாளர் தரம் -111 இற்­கான திறந்த போட்டிப் பரீட்சை போன்ற­வற்றை இம் மாதம் நடத்­து­வ­தற்­கான திக­திகள் பரீட்­சைகள் திணைக்க­ளத்­தினால் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அதன்­படி இலங்கை கீழைத்­தேய கல்விச் சங்­கத்தின் பரீட்­சைகள் இம்­மாதம் 21 ஆம் திகதி தொடக்கம் 31 வரையும் ஜூன் 01 தொடக்கம் 09 வரையும் ஆய்­வு­கூட உத­வி­யாளர் தரம் -111 இற்­கான திறந்த போட்டிப் பரீட்­சை­யினை இம்­மாதம் 26 ஆம் திக­தியும் இலங்கை அதிபர் சேவைக்­கான ஆங்­கிலப் பரீட்சையினை இம்மாதம் 31 ஆம் திகதியும் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

தேர்தல் ஆணையாளரின் அதிரடி அறிவிப்பு

தேர்தல் பிரச்சார காலத்தினுள் விகாரையில் அல்லது புனித தலத்தில்  தேர்தல் கூட்டத்தை நடத்தினால் அந்த வேட்பாளர் வெற்றிப்பெற்றாலும் அந்த வெற்றியை ...

%d bloggers like this: